மீண்டும் உக்ரைன் மீது உரசும் ரஷ்யா; 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் , ஏவுகணைகள் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மீண்டும் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
2ஆம் உலகப் போர் வெற்றி தின நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா தயாராகி வரும் சூழலில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2ஆம் உலகப் போர் வெற்றி தின நினைவு நிகழ்வு
தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வழங்கிய பின்னரும் தாக்குதல் நடத்துவது ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜபோரிஜ்ஜியா, டோனெட்ஸ்க், கார்கீவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் பொல்தவா உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் குடியிருப்புகள், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச கவலையை ஏற்படுத்தியுள்ளது