உலக அளவில் அதிக ஊதியம்; எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்தியர்
உலக அளவில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்க காரரான ஷங்க் மித்ரா இடம் பெற்றிருக்கிறார்.
உலக பணக்காரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு சில நாட்களுக்கு முன்பு 1.32 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. அதாவது உலகிலேயே முதல் டிரில்லினியர் என்கிற பெருமை இவருக்கு கிடைத்தது.

அதே நேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் ஸ்பேஸ் எக்ஸ் பங்கின் மதிப்பு பங்குச்சந்தியில் கடுமையாக சரிந்தது. இதையடுத்து எலான் மாஸ்ககுக்கு 363 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட அவரின் சொத்து மதிப்பு 957 பில்லியனாக குறைந்தது.
எனவே டிரில்லினியர் அந்தஸ்தை அவர் இழந்தார் . ஆனாலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் நீடித்து வருகிறார். ஒரு பக்கம் உலக அளவில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்க காரரான ஷங்க் மித்ரா இடம் பெற்றிருக்கிறார்.
Welltower என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரியகாக இருக்கும் ஷங்க் மித்ராவின் தற்போதைய ஓராண்டு சம்பளம் 821 மில்லியன் டாலராக உள்ளதாக The Wall Street Journal என்கிற அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.