இடைதேர்தலில் தோல்வியை சந்தித்த ட்ரம்ப் ; செனட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் ஜனநாயக் கட்சி
அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.

ந்நிலையில் சற்றுமுன்னர் வரையில் வௌியாகியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செனட் சபையில் ஜனநாயக கட்சி 51 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி இதுவரையில் 39 இடங்களை பெற்றுள்ளது. லோவாவில் (Iowa) பெற்ற எதிர்பாராத வெற்றியின் மூலம் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையின் மீதான தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கென்சாஸ் (Kansas), டெக்சாஸ் (Texas) மற்றும் தெற்கு கரோலினா (South Carolina) போன்ற குடியரசுக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியினர் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து அதிர்ச்சியளித்துள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் இச்சபையில் மேலும் ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
மிச்சிகன் (Michigan) மற்றும் மினசோட்டா (Minnesota) ஆகிய மாநிலங்களில் தாம் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் இரண்டு ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சியினர் இழந்தாலும் கூட, செனட் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான அளவு உறுப்பினர்களை அவர்கள் இன்னமும் கொண்டுள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு கரோலினாவில் 18 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும், கென்சாஸில் 16 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்திலும் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.