கனடா அடுத்த ஆண்டு எதிர்நோக்க உள்ள பாரிய சவால்
கனடா அடுத்த ஆண்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல பொருளியல் ஆய்வாளரும், மெக்யூரி என்னும் நிதி நிறுவனத்தின் பொருளியல் பிரிவு தலைவருமான டேவிட் டொய்ல்(David Doyle) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கனடா இதுவரையில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கவில்லை எனவும் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் காலாண்டு பகுதியில் மொத்த தேசிய உற்பத்தி மூன்று விதத்தினால் வீழ்ச்சி அடையும் எனவும் வேலையற்றோர் வீதம் ஐந்து வீதமாக உயர்வடையும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
கனடாவை பொருத்தமட்டில் இந்த நிலைமையானது பாரதூரமான பொருளாதார பிரச்சனையாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா பிரச்சனை என்பன ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பில் தாக்கத்தை செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் கனடாவின் பொருளாதார சைபர் தசம் ஒரு வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது வீட்டு சந்தைகளும் பின்னடைவை சந்திக்கும் என டொய்ல் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றது.
எதிர்வரும் 26 ஆம் தேதி மீண்டும் வட்டி வீதங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது