அமெரிக்காவின் “கோல்டன் டோம்” மிசைல் பாதுகாப்பு திட்டத்தில் இணைய விரும்பும் கனடா
அமெரிக்காவின் கேல்டன் டோம் "Golden Dome" மிசைல் பாதுகாப்பு திட்டத்தில் இணைவதற்கான கலந்துரையாடல்களில் கனடா ஈடுபட்டு வருகிறது என பிரதமர் அலுவலகம் (PMO) உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மார்க் கார்னிக்கு கனடா மக்கள் அளித்துள்ள வலுவான ஆதரவு, அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வழிவகுக்கிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“இந்த பேச்சுவார்த்தைகள் இயற்கையாகவே NORAD மற்றும் அதனுடன் தொடர்புடைய ‘Golden Dome’ போன்ற முயற்சிகளை வலுப்படுத்துவதை உள்ளடக்கியவை,” என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“கனடா எங்களை தொடர்புகொண்டு, இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக கூறியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உலகின் மற்ற பகுதியிலிருந்தோ அல்லது விண்வெளியிலிருந்தோ வட அமெரிக்கா நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளைத் தடுப்பதாகும்.