கனடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கனடியர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Desjardins என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடியர்கள் அதிக அளவில் கடன் தொல்லையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிது அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும் இது கடன் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவு கடன் பெறுவோரை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட்டி வீத அதிகரிப்பு காரணமாக கனடியர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் செலவுகள் அதிகரிப்பும் கடன் பிரச்சனைக்கான பிரதான எழுத்துக்களில் ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செலவு அதிகரிப்பு மற்றும் வட்டி வீத உயர்வு போன்ற ஏதுக்களினால் கனடியர்களினால் சேமிப்பு செய்வதில் சிக்கல்கள் எதிர் நோக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் மேலும் குறைக்கப்படும் என பல நிதி நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.