கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா... இந்தியா அறிவிப்பு
இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
Reuters
இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.
ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.