டிரம்ப்பின் தொலைபேசி அழைப்பை 4 முறை ஏற்க மறுத்த மோடி
இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் 4 முறை தொலைபேசியில் பேச முயற்சித்துள்ளார். ஆனால், 4 முறையும் டிரம்ப்பின் தொலைபேசி அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டதாக வெளிநாட்டு செய்தி தளங்கள் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு இன்று முதல் அமலாக உள்ளது. இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள டிரம்ப் 4 முறை முயற்சித்தார். ஆனால், டிரம்ப் இடம் பேச மோடி மறுத்துவிட்டார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் கூறினார்.
அவரது பேச்சு மோடிக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துவிட்டது. அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தொடர்ந்து மறுத்துவருகிறது. இது டிரம்ப் மீதான மோடியின் கோபத்தையும், அவர் கவனமாக செயல்படுவதையும் காட்டுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்குமுன்பே டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக கூறினார். அந்த வலைக்குள் சிக்க மோடி விரும்பவில்லை. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பக்கம் நிற்க இந்தியா விரும்பவில்லை