கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை;!
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக நேற்று (14) பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் (Mark Carney) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்
அதோடு 'மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்" என்று கனடாவின் புதிய பிரதமர்மார்க் கார்னி (Mark Carney) தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் (Mark Carney) தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மார்க் கார்னி (Mark Carney) , தமது முதலாவது சர்வதேச விஜயமாக அடுத்த வாரம் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது