கனடாவில் வசிக்கும் போது இப்படியா? ஆசிய பெண்கள் இருவரை அவமானப்படுத்திய நபர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசிய நாட்டவர்களான பெண்கள் இருவரை மொழி தெரியாதது தொடர்பில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் இணையவாசிகளையும் பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளியான காணொளி ஒன்று தற்போது 300,000 பார்வைகளை கடந்துள்ளது. ஆல்பர்ட்டாவில் வசிக்கும் டோனா டமாசோ என்பவரே குறித்த சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இரு சீனத்து பெண்கள் SkyTrainக்கான டிக்கெட்டுகளை வாங்க முயற்சி செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு அருகாமையில் ஆண் ஒருவர் அந்த சீனத்து பெண்களை கவனித்தவாறே இருந்துள்ளார்.
திடீரென்று அவர் குறித்த பெண்களிடம், நீங்கள் எந்த நாட்டவர்கள் என வினவியுள்ளார். அதுவரை பொறுமை காத்த டமாசோ, அந்த பெண்களுக்காக பரிந்து பேசுவது தமது கடமை என கருதி, பிரச்சனை என்ன என விசாரித்துள்ளார்.
குறித்த சீனத்து பெண்களிடம், நீங்கள் கனடாவில் வசிக்கும் போது இங்குள்ள மக்கள் போன்று நடந்துகொள்ள வேண்டும் எனவும், மொழி தெரியாதது குறித்து கிண்டலாகவும் பேசியுள்ளார் அந்த ஆண்.
டமாசோ அந்த நபரிடம் கடுமையாக பேசியதாலையே, அவர் அங்கிருந்து நகர்ந்துள்ளார். அவர் ஒரு இனவாதி என குறிப்பிட்டுள்ள டமாசோ, சட்டத்தரணி என கூறிக்கொள்ளும் அந்த நபருக்கு ஆசியர்களை பிடிக்கவில்லை போலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர், கனடாவில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான அறிகுறி இந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.