அமெரிக்க – கனேடிய எல்லைப் பகுதியில் ஏதிலிக் கோரிக்கையாளரின் சடலம் மீட்பு
அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதியில் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வீதியான ரொக்ஸ்ஹாம் வீதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஒர் சட்டவிரோத குடியேறி எனவும், ஏதிலி அந்தஸ் பெற்றுக் கொள்ள முயற்சித்து இவ்வாறு எல்லையை கடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏதிலிக் கோரிக்கையாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவின் நியூயோர்க் மாநில எல்லைப் பகுதிக்கும் கனடாவின் கியூபெக் மாகாண எல்லைப் பகுதிக்கும் இடையில் இந்த ரொக்ஸ்ஹாம் வீதி அமையப் பெற்றுள்ளது.
ஏதிலி என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக கியூபெக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.