கனடாவில் ஆண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்!
கனடாவில் பெண் ஒருவர் தன்னை விட 10 வயது குறைவான ஆண் நபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நபர் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்தவர் Scott Andrew Rosen (52). இவர் கடந்த 18ஆம் திகதி அங்குள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் Scott மீது கார் ஏற்றி கொன்றதாக Anh Thu Chiem (62) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். Scottம் Anhம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் எனவும் இதை கொலை வழக்காக பதிவு செய்துள்ளோம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.
Anh, Scott மீது காரை ஏற்றி எதற்காக கொலை செய்தார் என்ற காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் அது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.