கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டும் – மன்னர் சார்ள்ஸ்
கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டுமென மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கனடிய நாடாளுமன்றில்அக்கிராசன உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் சார்ள்ஸின் இந்த கருத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நேரடி பதிலடியாக அமைந்துள்ளது என பலர் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் தேசிய கீதத்திலிருந்து மேற்கோள் எடுத்த மன்னர், தனது உரையில் “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம், பல்வகைமை, சட்ட ஆட்சி, தன்னாட்சி மற்றும் சுதந்திரம் போன்ற அடிப்படை கோட்பாடுகளை பாதுகாப்பதற்கான காவலாளிகளாக இருக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வரி மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு நேர்மாறாக, திறந்த வர்த்தகத்தின் பலன்கள் குறித்து மன்னர் உரையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது, கனடா-அமெரிக்க உறவுகளில் எதிர்மறையான சாயலை வெளிக்கொணருகிறது. இந்த உரை, கனடா அரசால் எழுதியதாகும்.
அதில், இந்நாளின் அமைதியற்ற காலநிலை குறித்து நாட்டு மக்களில் பலர் “பயமும் பதற்றமும்” கொண்டுள்ளனர் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மன்னர் தனது உரையை ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் வழங்கினார்..
இந்நிலையில், ஜனநாயகத்தின் காப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என மன்னர் வலியுறுத்தியுள்ளார்.