கனடிய பிரதமர் உக்ரைனுக்கு விஜயம்
கனடிய பிரதமர் மார்க் கார்னி உக்ரைனுக்கு அதிகாபூர்வ விஜயம் ஒன்ற மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் நோக்கில் கனடிய பிரதமர் உக்ரன் தலைநகர் கீவ்விற்கு விஜயம் செய்துள்ளார்.
கனடா பிரதமர் இந்த நிகழ்வின் முக்கிய விருந்தினராக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனுக்கு கனடா படைகளை அனுப்புவதையும் நிராகரிக்கவில்லை என்று கனடாவின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர்நிறுத்தத்திற்குப் பின் உக்ரைனின் பாதுகாப்பை உறுதிசெய்ய கனடா முக்கிய பங்கை வகிக்க முடியும் என அண்மையில் பிரதமர் கருத்து வெளியிட்டிருந்தார்.
உக்ரைனில் விஜயத்தை முடித்த பின், கார்னி போலந்து, ஜெர்மனி மற்றும் லாட்வியா நாடுகளுக்குச் சென்று அரசியல், வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவுள்ளார்.