கனடாவில் 25 வயதுடைய நபரை தேடும் பொலிஸார்!
கனடா நியூமார்க்கெட்டில் வயதான பெண்ணின் சிறிய நாயுடன் அவரது வாகனத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 25 வயதுடைய நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 29 அன்று ஈகிள் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் டேவிஸ் டிரைவ் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு வெளியே இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 78 வயதான ஒரு பெண் தனது வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறியுள்ளார். அத்துடன் சந்தேக நபர் தன்னை அணுகி, தரையில் தள்ளிவிட்டு தனது காரின் சாவியை எடுத்ததாக அவர் பொலிஸாரிடம் கூறினார்.
அவர் தனது ஷிஹ்-பூ நாயான பாபியுடன் முன் இருக்கையில் திருடப்பட்ட காரில் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடினார்.

எவ்வாறாயினும், ஒரு நாள் கழித்து, ஆகஸ்ட் 30 அன்று, நாயுடன் குறித்த வாகனம் பக்கத்து வீட்டுக்காரரின் வழிப்பாதைக்குத் திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் பிராம்ப்டனைச் சேர்ந்த 25 வயதான குர்பிரீத் சிங்குக்கு அதிகாரிகள் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
சந்தேக நபரான சிங் 20 முதல் 25 வயதுடையவர் எனவும், மெல்லிய உடல்வாகு, கருமையான கூந்தலுடன், கடைசியாக வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.