கனடாவில் வங்கி அட்டைகள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை
கனடாவில் வங்கி அட்டைகள் விநியோகம் செய்வதில் தாமதங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய தபால் நிறுவன பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனடிய தபால் நிறுவன பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வங்கி அட்டை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்க ப்படுகிறது.
சுமார் 55,000 பணியாளர்கள் இவ்வாறு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் எப்பொழுது முடிவடையும் என்பது குறித்து தெரியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக அத்தியாவசியமான காலப்பகுதியில் கனடிய தபால் துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.