நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டஆப்கானிஸ்தானுக்கு கனடா உதவி
அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு 3 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.
உலக உணவு திட்டத்துக்கு (WFP) 1.3 மில்லியன் டொலர் வழங்கப்பட்டு, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க உதவப்படும்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ICRC) 1 மில்லியன் டொலர் வழங்கப்பட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
மேலும், குடிநீர், சுகாதார வசதி, அவசர தங்குமிடம், அத்தியாவசிய பொருட்கள், சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2025ஆம் ஆண்டில் கனடா, ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு மொத்தம் 36 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் தெரிவித்ததாவது, கடந்த ஞாயிறு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.