கனடா மாகாணங்களில் கட்டாயமாகும் நடவடிக்கை!
கனடாவின் மாகாண நிர்வாகங்கள் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க முடியும் என சமஷ்டி சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் (Jean-Yves Duclos) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதங்களில் கொரோனா தடுப்பூசியை மாகாணங்கள் கட்டாயமாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுதலையாவதற்கான ஒரே வழி கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்வதேயாகும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி பரிசோதனை செய்தல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டன நோய் பரவுகையை கட்டுப்படுத்தும் என்ற போதிலும், நோயை முற்றாக ஒழிக்க கொரோனா தடுப்பூசி அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 வீதமானவர்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.