அமெரிக்க நிறுவனங்கள் மீது கனடா விதித்த டிஜிட்டல் வரி இரத்து
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்து விதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் சேவைகள் வரியை கனடா அரசு இரத்து செய்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடன் நடைபெறும் புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியாக இருக்குமெனவும், கனேடியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் முயற்சிக்கு இது ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியைத் திரும்பப் பெறுவது, முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் மற்றும் எல்லா கனேடியர்களுக்கும் நலனளிக்கின்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என கனேடிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முடிவானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை (27) கனடாவுடன் உள்ள வர்த்தக பேச்சுவார்த்தைகளை திடீரென நிறுத்தியதையடுத்து வெளியானது.