புலம்பெயர்தல் திட்டம் ஒன்றிற்கான வருவாய் வரம்பை உயர்த்தியுள்ள கனடா புலம்பெயர்தல் திட்டம்
ஒன்றிற்கான குறைந்தபட்ச வருவாய் வரம்பை உயர்த்தியுள்ளது கனடா அரசு.
கனேடிய குடிமக்கள் மற்றும் கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்பவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்வதற்கான குறைந்தபட்ச வருவாய் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்புபவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் 47,549 டொலர்கள் குறைந்தபட்ச வருவாய் இருந்திருக்கவேண்டும் என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 3,000 டொலர்கள் அதிகம் ஆகும்.
அத்துடன், இது இரண்டு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச வருவாய் வரம்பு மட்டுமே.
ஒரு குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த குறைந்தபட்ச வருவாய் வரம்பு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டிற்கான குறைந்தபட்ச வருவாய் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்ய போதுமானதாக இருந்தால் மட்டும் போதாது.
அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளும் நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு வருவாய் ஈட்டியிருந்திருக்கவேண்டும்.
அதாவது, 2025ஆம் ஆண்டில் நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை ஸ்பான்சர் செய்ய விரும்பினால், 2024ஆம் ஆண்டில் உங்கள் குறைந்தபட்ச வருவாய் 47,549 டொலர்களாக இருந்திருக்கவேண்டும்.
அதேபோல, 2023 மற்றும் 2022ஆம் ஆண்டிலும் உங்கள் வருவாய் அந்த காலகட்டத்தில் ஒரு குடும்பத்தை ஸ்பான்சர் செய்ய எவ்வளவு இருந்திருக்கவேண்டுமோ, அவ்வளவு இருந்திருந்தால் மட்டுமே 2025இல் நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை ஸ்பான்சர் செய்யமுடியும் என புதிய விதி ஒன்றை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.