எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் கனடா கனடிய அரசாங்கம்
எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத போதை பொருட்கள் எல்லை பகுதிகள் ஊடாக கடத்தப்படுவது தொடர்பில் ட்ரம்ப் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக கனடிய அரசாங்கமும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஓர் கட்டமாக அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய அரசாங்கம் சட்டவிரோதக் குடியேறிகள் எல்லை தாண்டி பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்துவதற்கான மூலோபாயங்களை வகுத்து வருகின்றது.
உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி எல்லை தாண்டி அத்துமீறி பிரவேசிப்போரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.