ராணியாருக்கான அஞ்சலியால் கனேடிய பெற்றோர் எதிர்நோக்கும் நெருக்கடி
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதனால் கனேடிய பெற்றோர் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் கனடாவின் சில மாகாணங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பெற்றோர் பிள்ளைகளை பராமரித்துக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாடசாலை நேரத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டிருந்த பெற்றோர் பாடசாலை விடுமுறை என்ற காரணத்தினால் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அட்லாண்டிக் மாகாணங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் பல வழமை போன்று இயங்குகின்றன.
இதனால் பெற்றோர் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாது நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.