கனடாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம்
கனடாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் புதிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய முன்னேற்றமாகும் என கனடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கனடா தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுதப் படையினர் குழுவை இந்தோனேசிய தேசிய இராணுவம் நடத்தும் இரு வார பன்னாட்டு இராணுவ பயிற்சியில் பங்கேற்க அனுப்புகிறது.
கனடாவின் உச்ச இராணுவத் தலைவி ஜெனரல் ஜென்னி காரிக்னன் தனது முதலாவது இந்தோனேசிய பயணத்தின் போது இந்த இராணுவ ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்படிக்க கையெழுத்தானது.
கடல்சார் பாதுகாப்பு, இராணுவ இடையியல் செயல்திறன் மற்றும் அவசரநிலை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு, பன்னாட்டு சட்டத்தை பேணுவதிலும், கனடாவின் இறையாண்மையை பாதுகாத்தல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுப்பர் கருடா ஷீல்ட் Super Garuda Shield எனப்படும் இந்த பன்னாட்டு பயிற்சி 2007 முதல் ஜகார்த்தாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 2022 முதல் கனடா இதில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, கனடா பொறியியலாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பு குழுவினரை அனுப்பியுள்ளது. மொத்தம் 30 கனடிய படையினர் இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.