ரஷ்ய தூதுவரை அழைத்து கண்டனம்
வெளியிட்ட கனடா ரஷ்ய தூதர் ஓலெக் ஸ்டெபனோவை, கனடிய வெளிவிவகார அமைச்சு (Global Affairs Canada) அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா, போலந்து வான்வெளியில் ரஷ்யா ட்ரோன்கள் நுழைந்த சம்பவத்தை எதிர்க்கும் வகையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
போலந்து அதிகாரிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பல ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் எல்லையை கடந்ததாக தெரிவித்திருந்தனர். அவற்றில் சில நேடோ கூட்டணி விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது போலந்து வான்வெளியிலும், அதனால் நேடோ வான்வெளியிலும் நுழைவாகும்,” என வெளிவவிகார அமைச்சர் அனந்த் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் “பொறுப்பற்றது, ஆபத்தானது, மேலும் நாடோவுடன் பதற்றத்தை அதிகரிக்கும்” என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவின் உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை இது மாற்றாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேடோ “Eastern Sentry” என்ற புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.