கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
கனடா மற்றும் அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் போலீஸ் அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் எல்லை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வார கால பகுதியில் போலீசாரின் பிரசன்னம் சுமார் 35% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்த நிலையில் இவ்வாறு எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதாகவும் பாரிய அளவிலான போதை பொருட்கள் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இவ்வாறான ஓர் பின்னணியில் வரி விதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரி விதிப்பு 30 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைய நாட்களாக கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.