200,000 அகதிகளை வரவேற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்த கனடா அரசு
கனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது.
1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.
1978ஆம் ஆண்டு, அப்படி Hai Hong என்னும் சரக்குக்கப்பலில் கடலில் சிக்கித் தவித்த அகதிகளை ஏற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கான கனேடியர்களும், அமைப்புகளும் முன்வந்தன.
1975க்கும் 1990களுக்கும் இடையில் கனடா சுமார் 200,000 அகதிகளை வரவேற்றது. கனடா வந்த வியட்நாமியர்கள், மொன்றியல், ரொரன்றோ மற்றும் வான்கூவர் முதலான இடங்களில் குடியேறினார்கள். நேற்று, அதாவது, மே மாதம் 9ஆம் திகதி, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று நடைபெற்றது.
அந்த காலகட்டத்தில் அத்தனை அகதிகளை வரவேற்ற கனடாவில் இன்று சூழல் மாறியிருந்தாலும், புலம்பெயர்வோர் பலர் குடியேற விரும்பும் நாடாக இன்றும் கனடா திகழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.