கனடாவின் மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தும் அமெரிக்கா
கனடாவின் மீது அமெரிக்க குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர்.
கனடாவில் காட்டுத் தீகளையும் புகையையும் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் கடுமையான வார்த்தைகளால் இது தொடர்பில் அறிக்கைகள் மற்றும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கோடையில் பல மாநிலங்களில் காற்றை மாசுபடுத்திய புகை, காரணமாக இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மிச்சிகனின் அழகிய ஏரிகள் மற்றும் முகாம் மைதானங்களில் குடும்ப விடுமுறைகளை அனுபவிப்பதற்கு பதிலாக, மூன்றாவது கோடையாக, கனடாவின் காட்டுத் தீகளைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்தத் தவறியதால், மிச்சிகன்வாசிகள் ஆபத்தான காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிச்சிகன், அயோவா, நியூயார்க், வடக்கு டகோட்டா, மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த புகை இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை பாதிக்கிறது என்றும், அமெரிக்கா இதை வரி பேச்சுவார்த்தைகளில் ஒரு பிரச்சினையாக எழுப்பலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், பருவநிலை மாற்றத்தின் பங்கை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று பருவநிலை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.