டொராண்டோவில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் கைது
டொராண்டோ நகர மையத்தில் உள்ள பூங்காக்களில் இடம்பெற்ற மூன்று பாலியல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் தொடர்பில் முதலில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் மூன்றாவது சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 11 ஆம் திகதி பிற்பகல், குயின்ஸ் குவே வெஸ்ட் மற்றும் ரீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள எச்.ரீ.ஓ பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தன்னை ஓர் கைரேகை ஜோதிடராக அறிமுகம் செய்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐம்பது வயதான பய்சல் முஹமட் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற சம்பவங்கள் கடந்த ஜூலை 31 அன்று கொரோனேஷன் பூங்காவிலும், ஜூன் 27 அன்று டொராண்டோவில் மற்றுமொரு பூங்காவிலும் இதேவிதமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபரினால் வேறும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.