சீன ராஜதந்திரிகள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படுவர் என எச்சரிக்கை
சீன ராஜதந்திரிகள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் தவறு இழைத்தமை நிரூபிக்கப்பட்டால் சீன ராஜதந்திரிகள் நாடு கடத்தப்படுவர் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
சீன அரசியல்வாதிகளுக்கு ராஜதந்திர வீசா வழங்குவது நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தலையீடு செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவ்வாறானவர்களை நாடு கடத்த தயக்கம் காட்டப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு கனேடிய வீசா வழங்குவதனை நிராகரிப்பதற்கு தயங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் ஜோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.