தலிபான் அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படுமா?
கனடா விளக்கம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது என கனடா அறிவித்துள்ளது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடமையாற்றி வந்த கனேடிய படையினர் தலிபான்கள் ஆட்சி அமைப்பனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் குறித்த நாடாளுமன்றின் விசேட அமர்வுகளில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் கனடாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், தலிபான்களை அங்கீகரிப்பதற்கு எவ்வித திட்டங்களும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய படையினர், ஆப்கானிஸ்தானில் மிகச் சிறந்த சேவையை வழங்கி வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.