கனடாவின் மிகவும் பாதுகாப்பான நகரங்கள்?
ஒரு நகரில் வதிவதற்கு அல்லது விடுமுறையை கழிப்பதற்காக செல்வதற்கு தீர்மானிக்கும் போது பல்வேறு விடயங்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
அவ்வாறான ஏதுக்களில் அந்த நகரின் பாதுகாப்பு நிலைமைகளும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் நாட்டின் மிகவும் பாதுகாப்பான நகரங்கள் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நகரங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களின் தீவிரதன்மையை அடிப்படையாகக் கொண்டு தர வரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஓக் பே நகரம் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் வரிசையில் முன்னணி வகிக்கின்றது.
சிறிய நகரமான இந்த நகரில் குற்றச் செயல்களின் தீவிரத்தன்மை 27.5 புள்ளிகள் என்ற அடிப்படையில் காணப்படுகின்றது. அடுத்த நகரமாக கியூபெக்கின் பிலெய்ன்வில் நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த நகரின் குற்றச் செயல்களின் தீவிரத்தன்மை புள்ளிகள் 28.3 என பதிவாகியுள்ளது.
மூன்றாம் நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் அரோரா நகரம் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், இதன் புள்ளிகள் 34.2 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஓக் பே, கியூபெக்கின் பிளெய்ன்வில், ஒன்றாரியோவின் அரோரா, ஒன்றாரியோவின் லாசெல், ஒன்றாரியோவின் புர்லிங்டன், கியூபெக்கின் லிவைஸ், ஒன்றாரியோவின் மார்க்கம், கியூபெக்கின் கியூபெக் நகரம், ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் மற்றும் ஒன்றாரியோவின் ஒட்டாவா ஆகிய நகரங்கள் முறையே முதல் பத்து பாதுகாப்பான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
1. Oak Bay, British Columbia
2. Blainville, Quebec
3. Aurora, Ontario
4. LaSalle, Ontario
5. Burlington, Ontario
6. Lévis, Quebec
7. Markham, Ontario
8. Quebec City, Quebec
9. Richmond Hill, Ontario
10. Ottawa, Ontario