கனடாவில் பிரபல குழந்தை பெயர்கள் என்ன தெரியுமா!
கனடாவில் அதிகளவில் பிரபலமான குழந்தை பெயர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டிலும் சிறுமிகளுக்கான மிகவும் பிரபலமான பெயராக ‘ஒலிவியா’ தொடர்ந்தும் முதலிடம் பிடித்துள்ளது. கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் அண்மையில் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த பெயர் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
2024-இல் மட்டும் பெற்றோர்கள் 1,639 தடவைகள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 முதல் ஒலிவியா எப்போதும் முன்னணி 10 இடங்களில் இடம்பெற்று வருகிறது.
ஆண் குழந்தைகளுக்கான பெயர்களில், ‘நோவா’ தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. 2024-இல் மட்டும் 2,115 சிறுவர்களுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2005 முதல் ‘நோவா’ தொடர்ந்து முன்னணி 10 இடங்களில் இடம்பெற்று வருகிறது. 2020 முதல் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘நோவா’ அல்லது ‘ஒலிவியா’ என்ற பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கான மற்ற பிரபலமான பெயர்களில் வில்லியம், லியம், தியோடோர், ஒலிவர், லூக்காஸ் அடங்கும். சிறுமிகளுக்கான பட்டியலில் எம்மா, அமீலியா, சார்லட், சோஃபியா (அல்லது சோஃபியா) போன்ற பெயர்கள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றது.