கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு நிலைமை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், வேலை இல்லாதோர் எண்ணிக்கை 16 இலட்சமாக உயர்ந்ததுடன், வேலைவாய்ப்பு விகிதம் 7% ஆக அதிகரித்துள்ளது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இந்த வேலை இல்லாதோர் விகிதம், கோவிட்-19 காலத்தை தவிர்த்து, கடந்த 9 ஆண்டுகளில் பதிவான மிக அதிக வேலையற்றோர் எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்தில் 6.9% இருந்த வேலை இல்லாதோர் விகிதம், மே மாதத்தில் 7% ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக இந்த தொகை அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
“நாட்டில் தற்போது வேலை தேடுவதில் மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார்கள்,” என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.