கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் தொழிற்சந்தையில் 91000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஒப்பீட்டளவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தை விடவும் வேலையற்றோர் எண்ணிக்கை வீதம் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சனத்தொகை அதிகரிப்பிற்கு நிகரான அடிப்படையில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.