டிரோன் தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தும் கனடா இராணுவம்!
உக்ரைனில் டிரோன்கள் மூலம் நடத்தப்படும் போரின் தாக்கம் உலக நாடுகளின் இராணுவ வியூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கனடா ஆயுதப் படைகளும் தனது தேவைகளுக்கான டிரோன் கொள்முதலை தீவிரப்படுத்தியுள்ளது.
'மினர்வா' என்ற திட்டத்தின் கீழ், ஆர்க்டிக் பகுதிக்கான கண்காணிப்பு டிரோன்கள், சரக்கு விநியோக அமைப்புகள் மற்றும் பீரங்கிப் படைகளுக்கு இலக்குகளைச் சுட்டிக்காட்டும் டிரோன்களை உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
வீரர்களை நேரடியாக ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்து, டிரோன்களை 'தோட்டாக்களைப் போலப் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய ஒரு பொருளாக' அணுக கனடா இராணுவம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் உற்பத்திப் பட்டியலை மட்டுமே சார்ந்திராமல், கனடாவிலேயே இயங்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் உள்ளூர் டிரோன் உற்பத்தியைப் பெருக்குவதையும், ரஷ்யா போன்ற நாடுகளின் டிரோன் ஊடுருவல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகளை அமைப்பதையும் கனடா பாதுகாப்புத் துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.