தரவுகளைத் திருடிய ஹேக்கர்களுக்கு உதவிய கனேடிய நிபுணர் கைது!

Canada
By Kamal Oct 14, 2026 03:18 PM GMT
Report

அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ மேற்கொண்டுவரும் சைபர் குற்றவாளிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில், கனடாவைச் சேர்ந்த பிரபல ரேன்சம்வேர் தொடர்பாளர் எட்வர்ட் டூப்ரோவ்ஸ்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் சிறைத்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. பென்சில்வேனியா கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி, எட்வர்ட் டூப்ரோவ்ஸ்கி மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

பணத்தைப் பறிக்கும் நோக்கத்துடன் தகவல்களின் ரகசியத்தன்மையை அச்சுறுத்தும் வகையிலான சதித் திட்டம்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல்.

தரவுகளைத் திருடிய ஹேக்கர்களுக்கு உதவிய கனேடிய நிபுணர் கைது! | Canadian Ransomware Negotiator Arrested

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றப் பதிவுகள் சில பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனினும், சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சைபர் ஸ்டீவர்ட்' நிறுவனத்துடன் தொடர்புடைய கனேடிய சைபர் பாதுகாப்பு நிபுணரான எட்வர்ட் டூப்ரோவ்ஸ்கியே இந்தக் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவரது நிறுவனமானது சைபர் குற்றவாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் சுமுகத் தீர்வு காண்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றது எனக் கூறப்படுகிறது.

தற்போது 54 வயதான எட்வர்ட் டூப்ரோவ்ஸ்கி, டொராண்டோ நகருக்கு வடக்கே உள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் பிலடெல்பியாவில் உள்ள மத்திய தடுத்து வைப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

எஃப்பிஐ பணியாளர்கள் குறித்த ரகசியத் தகவல்களைத் திருடி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'ஷைனிஹண்டர்ஸ்' என்ற ஹேக்கர் குழுவை முடக்கும் பணியில் எஃப்பிஐ தீவிரம் காட்டி வருகிறது.

இந்தச் சூழலில்தான் இந்தைக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷைனிஹண்டர்ஸ் குழுவிற்கு உடந்தையாகச் செயல்பட்ட சந்தேகத்தின் பெயரிலேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் (Kash Patel) உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இது குறித்து எஃப்பிஐ தரப்பில் கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிட மறுத்துவிட்டனர். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US