சர்ச்சைக்குரிய நாட்டுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா
உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.
மூன்றாம் நாடு ஒன்றில் இந்த இராணுவ பயிற்சி வழங்கப்பட உள்ளது. கனேடிய இராணுவப் படையினர், உக்ரைன் படையினருக்கு இவ்வாறு பயிற்சி அளிக்க உள்ளனர்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பயிற்சிகளை ரஸ்யா படையெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கனடா இடைநிறுத்தியிருந்தது.
எம்777 ரக ஆட்டிலறி ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கனேடிய படையினர் வழங்க உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டில் முதன் முறையாக கனடா, உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய இராணுவ பயிற்சியின் மூலம் சுமார் 30000 படையினர் பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இராணுவ பயிற்சி வழங்கிய கனேடிய உயர் அதிகாரிகளுக்கு ரஸ்யா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.