கனேடியர்களுக்கு ஆயுள் கெட்டி
கனடாவில் நூறு வயதைத் தாண்டிய சனத்தொகையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சனத் தொகையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலைப் பளுவுடன் இருத்தல், குடும்பத்தை நேசித்தல், சிறிய சிறிய சந்தோசங்களை அனுபவித்தல் போன்றனவே தங்களது நீண்ட ஆயுளின் இரகசியம் என நூறாண்டு ஆயுளுடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவில், கடந்த 2021ம் ஆண்டில் நூறு அல்லது அதனையும் கூடிய வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கை 9545 என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் எனவும், மொத்தமாக 7715 பேர் நூறு வயதைக் கடந்த பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1971ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 1065 ஆக காணப்பட்டது.
கடந்த 1971ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 4.9 வீதமானவர்கள் நூறு வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் 2021ம் ஆண்டில் இது ஒரு லட்சத்திற்கு 25.8 வீதமாக உயர்வடைந்துள்ளது.