கனடிய இராணுவ கமாண்டர் உக்ரைன் போரில் பலி
கனடிய இராணுவ கமாண்டர் படைவீரர் ஒருவர் உக்ரைனில் இடம்பெற்ற போரில் உயிரிழந்துள்ளார்.
ரஸ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் தன்னார்வ படைப் பிரிவில் இந்த கமாண்டர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான ஜீன் பிரான்கோயிஸ் ரெட்லே என்ற கனடியரே போரின் போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் போரில் கனடாவில் பிறந்த ஓர் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தாக வெளியாகும் தகவல்களை வெளிவிவகார அமைச்சும் உறுதி செய்துள்ளது.
எனினும் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கனடிய அரசாங்கத்தின் இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ராஜதந்திர ரீதியில் உதவிகள் வழங்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.