கனடாவில் சாலை விபத்தில் சிக்கிய மேஸ்ட்ரோ: அதிர்ச்சியில் ரசிகர்கள்
கனேடிய இசை ரசிகர்களால் அன்புடன் மேஸ்ட்ரோ என கொண்டாடப்படும் Boris Brott சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
ஹாமில்டனில் செவ்வாய்க்கிழமை பகல் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார் மேஸ்ட்ரோ Boris Brott.
சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஹாமில்டன் பொலிசார், பகல் சுமார் 10 மணியளவில் சாலை விபத்து தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், தவறான பாதையில் சென்ற வாகனம் ஒன்று பாதசாரி ஒருவரை பலமாக மோதிவிட்டு, தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதியில் இருந்து 78 வயதான நபரை மீட்டதாகவும், தற்போது அவர் மேஸ்ட்ரோ Boris Brott என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனைக்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டும், காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தை ஏற்படுத்திய சாரதி, சம்பவயிடத்தில் இருந்து தப்பினாலும், உடனடியாக அவர் கைதாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேஸ்ட்ரோ Boris Brott மரணமடைந்துள்ள தகவல் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.