கனேடிய பிரஜைக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை!
கனேடிய பிரஜை ஒருவருக:கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சவூதியை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியருக்கு இவ்வாறு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் பிரச்சாரம் செய்ததாக குறித்த கனேடியப் பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
39 வயதான மொஹமட் காலீபா என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயங்கரவாத குழுவொன்றுக்கு தாம் உதவியதாக காலீபா அண்மையில் நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2019ம் ஆண்டில் காலீபாவை சிரியாவில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீவிராத இயக்கம் சார்பில் குறித்த நபர் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது