சிரியாவில் விடுதலையான பெண்கள் கனடாவில் கைது
சிரியாவிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பிய இரண்டு பெண்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினால் கைது செய்பய்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பெண்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பெண்கள் நாடு திரும்பிய போது கனேடிய அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர். 27 வயதான ஒமய்மா செளவெ மற்றும் கிம்பர்லி போல்மன் ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒமய்மாவிற்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டிலேயே தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிம்பர்லி போல்மன் என்ற பெண்ணையும் விமான நிலையத்தில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 810ம் பிரிவின் அடிப்படையில் போல்மன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்களை சிரியாவிலிருந்து விடுதலை செய்வதற்கு அமெரிக்கா உதவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பெண்களும் மொன்ட்ரியல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.