கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு விஜயம்
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவினை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து பேரைக் கொண்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இரண்டு லிபரல் உறுப்பினர்களும் மூன்று கொன்சவடிவ் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றம் கனடிய பிரதமர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளினதும் தலைவர்கள் நேரடியாகவே தங்களை ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.