30,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்கமுயன்ற கனேடிய பயணியால் பரபரப்பு !
30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர் அமெரிக்கா விமானத்தின் கதவை கனேடிய பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மில்வாக்கியில் இருந்து டல்லாஸ் நோக்கி பயணித்த விமானத்திலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மனநல மருத்துவரிடம் அனுப்பப்பட்ட பயணி
விமானம் பறந்து கொண்டிருந்த போது, பயணி விமானப் பணிப்பெண்ணை அணுகி, உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும், விமான பணிப்பெண் கோரிக்கையை மறுத்ததையடுத்து, அவர் பீதியடைந்து கதவை திறக்க முயன்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து அங்கிருந்த மூன்று பயணிகள் விமானப் பணிப்பெண்ணின் உதவிக்கு வந்து ஆக்ரோஷமான பயணியை மடக்கிப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சரியான நேரத்தில் டல்லாஸ் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் மனநல மருத்துவரிடம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.