சீனாவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவரும் விடுதலை... கனடா பிரதமர் தகவல்

Canada China North Korea
By Balamanuvelan Sep 25, 2021 06:50 AM GMT
Report

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael Kovrigம் சீன விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் கனடாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

வடகொரியா மற்றும் சீனாவில் பணியாற்றிய கனேடிய தொழிலதிபரான Michael Spavor என்பவரும், முன்னாள் கனேடிய தூதரக அலுவலரான Michael Kovrig என்பவரும் உளவு பார்த்ததாக சீனாவால் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் கனடா நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உண்மையில், இந்த விடயத்துக்குப் பின்னால் சீனாவின் கபட நாடகம் ஒன்று உள்ளது. 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீன நிறுவனமான Huawei Technologieயின் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou என்னும் பெண்மணி, வான்கூவரில் வைத்து கனடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கனடா அவரை கைது செய்ததால், உடனடியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா கனேடியர்களான Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்தது.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, சீனா Mengஇன் கைதுக்காக பழிவாங்கத்தான் Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்தது என்பது உலகுக்கே தெரியும். ஆனாலும், சீனா தான் பழிவாங்குவதற்காக Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்யவில்லை, அவர்கள் உளவு பார்த்தார்கள் என்றே கூறிவந்தது.

இந்நிலையில், திடீரென Meng மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர் நேற்று இரவு 7.30 மணிக்கே வான்கூவர் விமான நிலையத்திலிருந்து சீனா புறப்பட்டுவிட்டார்.

அவர் விடுவிக்கப்பட்ட அதே நேரத்தில், சீனா Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் விடுவித்துள்ளது. அவர்களும் சரியாக நேற்று இரவு 7.30 மணிக்கு சீனாவிலிருந்து புறப்பட்டு விட்டார்கள்.

இதன் பின்னணியில், அமெரிக்க அதிபர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை உளவு பார்த்ததாக Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்ததாக சீனா கூறிவந்த நிலையில், Meng விடுவிக்கப்பட்டதும், அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதால், சீனா கூறியது பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US