மனநல பாதிப்பு கொண்டவர்களை வீடியோ எடுத்து கேலி செய்த கனேடிய பொலிசார்

Balamanuvelan
Report this article
கனேடிய பொலிசார் ஒருவர். மன நல பாதிப்பு கொண்டவர்களை வீடியோ எடுத்து அவர்களை கேலி செய்யும் வகையில் அந்த வீடியோக்களை சக பொலிசாருடன் பகிர்ந்தது தெரியவந்துள்ளது.
Ottawaவைச் சேர்ந்த Const. Jesse Hewitt என்னும் அந்த பொலிசார் மீது 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆறு பெண்களையும் ஒரு ஆணையும் அவர்களது அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துள்ளார் Hewitt. அப்போது அவர்கள் பொலிஸ் காவலில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பெண்கள் மன நல சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வீட்டின் கதவை மிதித்து உடைத்து ஒரு பெண்ணை சட்ட விரோதமாக கைது செய்துள்ளார் Hewitt.
மேலும், தான் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை, அதிலிருப்பவர்களை கேலி செய்வதற்காக பரப்பியுள்ளார் Hewitt.
Hewitt மீதான குற்றச்சாட்டுகள் வெளியே தெரியவந்து பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் மீது துறை ரீதியான விசாரணை துவக்கப்பட, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டு பொலிஸ் துறையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
அவரது ராஜினாமா இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் மீது துறை சார்ந்த விசாரணையும் இனி தொடராது என அறிவிக்கப்பட்டுள்ளது.