போர் பதற்றம்: சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைக்கு பெரும் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் ஏற்றுமதித் துறை ஆகிய இரண்டும் தற்பொழுது சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக இலங்கைக்கு வரவிருந்த 768 விமான சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 30% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை இலங்கையின் ஏற்றுமதித் துறையிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் மத்திய கிழக்கு பிராந்தியம் சுமார் 8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடி தொடருமானால், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 35% தேயிலையை மற்ற நாடுகளுக்குத் திருப்பி விடுவது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.