கனடாவில் மர்ம பொருள் காரணமாக மூடப்பட்ட பாலம் மீள திறப்பு
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் காணப்படும் அம்பேசிடர் பாலம் மர்ம பொருள் தொடர்பிலான அச்சம் காரணமாக மூடப்பட்டது.
சில மணித்தியாலங்கள் இந்த பாலத்தை மூடி குறித்த மர்ம பொருள் தொடர்பில் போலீசார் சோதனை முன்னெடுத்தனர்.
வாகனம் ஒன்றில் இருந்த மர்ம பொருள் தொடர்பாகவே போலீசார் இவ்வாறு தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனை நடத்துவதற்காக சுமார் 2 மணித்தியாலங்கள் பாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோதனையின் பின்னர் பாலம் மீளவும் திறக்கப்பட்டது.
சோதனை நடத்தப்பட்ட காலத்தில் மாற்று பாதைகளை பயன்படுத்தி போக்குவரத்து செய்யுமாறு சாரதிகளுக்கு போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த வாகனத்தில் காணப்பட்ட மர்ம பொருள் என்ன என்பது பற்றியோ அதனை யார் கொண்டு வந்தார்கள் என்பது பற்றியோ போலீசார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.