இலங்கை பொது தேர்தல் தொடர்பில் கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்
இலங்கையில் நாளை(14) பொதுதேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் இம்முறையும் ஒரு தேசமாக திரண்டு தமிழ்தேசிய இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கவேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கனடிய தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் வழக்கமாக காலம்காலமாக இடம்பெற்றுவரும் தேர்தல்களில் தனிமனித நலனை முன்னிலைப்படுத்தாது தமிழ் தேசிய இனத்தின் கூட்டு நலனை முன்னிலைப்படுத்தி தமது வாக்குகளை செலுத்தி தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.
அதேபோன்று நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக திரண்டு 75வருடங்களிற்கு மேலாக இடம்பெற்றுவரும் மாபெரும் வீரமும் உயரிய தியாகமும் நிறைந்த விடுதலைப்போராட்டத்திற்கும் மத்தியில் இன்றும் ஓயாது தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்திற்கு வலுச்சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கன்றோம்.

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய அடிப்படையில் அமையவேண்டிய தீர்வை தமிழர் தேசத்திற்கான அரசியல்தீர்வை நிராகரித்ததும்,ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி கட்டமைப்பை தொடர்ந்து திணித்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை சபையால் உருவாக்கப்பட்ட அனைத்துலக விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளை நோக்கிய தீர்மானங்களை நிராகரித்தும்,தமிழன அழிப்பை புரிந்தவர்களிற்கான பொறுப்புகூறலை நிராகரித்தும் வந்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கமும் இவ்வாறான பாதையில் பயணிக்க முயல்வதை அவதானிக்க முடிகின்றது. எனவே தமிழன அழிப்பிற்கான அனைத்து பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை ஏற்றுக்கொண்டு இவற்றை அடைவதற்காக உழைப்பதிலும்,
அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற சமூக பொருளாதார கலாச்சார அனைத்து கூறுகளின் சிதைவுகளை தடுத்து நிறுத்துவதிலும்,
அவற்றை மீள்கட்டுமானம் செய்வதிலும் அர்ப்பணிப்போடும் உண்மையாகவும் மற்றும் செயலிலும் கடைப்பிடிக்க கூடிய ஆளுமை மிக்க வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை தெரிவு செய்து தமிழ் மக்களின் தெரிவாக நாடாளுமன்றம் அனுப்புவதே காலத்தின் தேவையாகும் என்றும் கனடிய தமிழர் தேசிய அவை சுட்டிக்காட்டியுள்ளது.