கனேடிய பெண்ணுக்கு லொட்டரியில் 35 மில்லியன் டொலர் பரிசு
கனேடிய பெண் ஒருவர், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், ஒருவழியாக அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku, தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்தாலும், தனக்கு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்த்ததேயில்லை என்கிறார்.
BCLC
அவர் எதிர்பார்க்காவிட்டால் என்ன? அதிர்ஷ்டம் அவரைத் தேடிவந்துவிட்டதே! ஆம், Rhondaவுக்கு சமீபத்தில் லொட்டரியில் 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
Rhondaவுக்கு, தனக்கும், தன் மகன் மற்றும் மகளுக்கும் ஆளுக்கொரு வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தற்போது லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டத்தால் அவரது கனவு நிறைவேற உள்ளது.
BCLC
அத்துடன், கேரவன் இணைக்கப்பட்ட ட்ரக் ஒன்றை வாங்கி குடும்பமாக இன்பச் சுற்றுலா செல்லவும் திட்டம் வைத்துள்ளார் Rhonda.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |